Search Hari11888 Blog

THANKS TO DOG - TRUE EVENT

ஸ்காட்லாந்தில் கிளெர்க் ஒருவர் இருந்தார். ரொம்ப வசதியானவர் இல்லை. தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குபோய்விட்டு வரவேண்டும் என்று ஆசை.

அமெரிக்காவுக்கு
போகவேண்டுமென்றால் நிறைய பணம் வேண்டுமே. எனவே தினமும் தான்சம்பாதிப்பதில் கொஞ்சம் பணத்தை சேமிக்க ஆரம்பித்தார். சில வருடங்களில்கணிசமான பணம் சேர கிளெர்க் குடும்பத்தினர் குதுகலமாக அமெரிக்காசெல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். கப்பல் சாமானிய மக்களுக்கானவகுப்பில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டது கப்பல் புறப்படுவதுற்கு ஒரு வாரம்முன்பு எதிர்பாராத சம்பவம் நடந்தது. கிளேற்கின் மகனை தெருவில் ஒரு நாய்கடித்து விட்டது. தெரு நாய் கடித்தால் ராபிஸ் என்ற உயிர் கொள்ளும் நோய் வரவாய்ப்புண்டு என்பதால் உடனடியாக மருத்துவமனையில் அந்த பையனைசேர்த்தார்கள்.

மகனை நாய் கடித்த சோகம் ஒரு பக்கம் என்றால் அமெரிக்காபோக முடியாமல் போய்விட்ட சோகம் இன்னொரு பக்கம். எல்லாவற்றுக்குமான அந்த தெரு நாயை சபித்தார். குறிபிட்ட தினம் வந்தது. கப்பல் அமெரிக்கா புறப்பட்டு சென்றது . கப்பல் நடுக்கடல் பனி பாறையில் மோதி உடைந்தது . கப்பல் கடலில் மூழ்கிவிட்டது என்ற செய்தி வந்தது. கிளெர்க்குடும்பத்தினர் ஆண்டவனுக்கு மட்டுமின்றி தெரு நாய்க்கும் நன்றி கூறினார்கள்.


மூழ்கிய அந்த கப்பல் TITANIC.